சுடச்சுட

  

  சிவகாசியைச் சேர்ந்த பெண் கவிஞர் ம.திலகபாமா பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாசு, மாநில இளைஞர் அணித் தலைவர் அன்புமணிராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலோடு, சிவகாசியைச் சேர்ந்த ம.திலகபாமா கட்சியின் மாநிலத்துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான பாட்டாளி இளம் பெண்கள் அணித் தலைவராகவும் ம.திலகபாமா நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவகாசி தொகுதியில் திலகபாமா பாமக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai