Enable Javscript for better performance
மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வழக்குகளில் ரூ. 1.09 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் நீதிமன்றம் மூலம் 43 வழக்குகளில் ரூ. 1.09 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

    By ஸ்ரீவில்லிபுத்தூர்,  |   Published on : 12th June 2016 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 43 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.1,09,48,000-க்கு உத்தரவு வழங்கப்பட்டது.

    மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆணைக் குழு அலுவலகம் மற்றும் சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றன.

    ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ரா.தாரணி தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.வசந்தி, சார்பு நீதிபதி எஸ்.கோவிந்தராஜ், முதன்மை மாவட்ட உரிமையியில் நீதிபதி அ.பசும்பொன் சண்முகையா, விரைவு குற்றவியல் நீதிபதி பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், வங்கிகள் தொடர்புடைய வழக்குகள், தொழிற்சாலை தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 573 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 43 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ.1,09,48,000 இழப்பீடு வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. இதர வழக்குகளுக்கு ரூ.6.90 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு வழங்கப்பட்டது.

    வங்கிகளில் நிலுவையில் உள்ள வராக்கடன் வழக்குகள் 314 பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 24 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.7,03,100-க்கு உத்தரவு வழங்கப்பட்டது. இதில் ரூ.2,17,100 உடனடியாக வசூலிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட நீதிமன்ற சிரஸ்தாரர் பொன் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நிர்வாக அதிகாரி பேச்சியப்பன் செய்திருந்தார். பி.ரவீந்திரன் நன்றி கூறினார். முன்னதாக மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முதன்மை அமர்வு நீதிபதி மரக்கன்று நட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai