சுடச்சுட

    

    திருத்தங்கல்லில் மனைவியை தாக்கிய கணவனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    திருத்தங்கல் கே.கே.நகரில் வசிக்கும் கூலித்தொழிலாளி ராஜா(38).

    இவரது மனைவி தவமணி(35). மதுப்பழக்கம் உள்ள ராஜா சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ராஜா மது அருந்த பணம் கேட்டபோது,தவமணி தர மறுத்தாராம். இதனால் ராஜா மனைவியை தாக்கியுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai