சுடச்சுட

    

    மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

    By ராஜபாளையம்,  |   Published on : 12th June 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சனிக்கிழமை காலையில் மூலவர் மாயூரநாதசுவாமி அஞ்சல்நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, வழிபாடுகள் நடத்தினர். பின்னர் கோயில் முன்பு உள்ள கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது.

    பத்துநாள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில், பல்வேறு சமுதாயங்கள் சார்பில் தினமும் விழா நடத்தப்பட்டு இரவு அம்மன் அலங்கார வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். ஏழாம் நாளான ஜூன் 17 இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், ஜூன் 19 காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன. 20-ஆம் தேதி தீர்த்தவாரியுடன் விழா முடிகிறது. மறுநாள் பைரவர் பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் அறிவழகன், திருவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai