சுடச்சுட

    

    மீன் மார்க்கெட்டை ஏலம் விட எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

    By விருதுநகர்,  |   Published on : 12th June 2016 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகரில் உள்ள மீன் மார்க்கெட் கட்டண வசூலை தனியாருக்கு ஏலம் விட எதிர்ப்புத் தெரிவித்து மீன் வியாபாரிகள் சனிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    விருதுநகர் கச்சேரி சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் உள்ளது. இதில் 30 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த கடைகளுக்கான கட்டண வசூலை நகராட்சி ஏலம் விடுவது வழக்கம். ஏலம் எடுத்தவர்கள் மீன் வியாபாரிகளிடம் தினசரி வாடகை வசூலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்ட காலம் முடிவடைந்தது. இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் நேரடியாக வாடகை வசூல் செய்தனர். இந்நிலையில், ஜூன் 16-இல் மீண்டும் மீன் மார்க்கெட்டை ஏலம் விட நகராட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீன் வியாபாரிகள், கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இருப்பினும் நகராட்சி நிர்வாகம், மார்க்கெட் கட்டணத்தை ஏலம் விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனவே, மீன் வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என மீன் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai