Enable Javscript for better performance
வத்திராயிருப்பு பகுதிக்கு கிடை மாடுகள் வருகை- Dinamani

சுடச்சுட

    

    வத்திராயிருப்பு பகுதிக்கு கிடை மாடுகள் வருகை

    By விருதுநகர்,  |   Published on : 12th June 2016 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த கிடை மாடுகள் மேய்ச்சலுக்காக விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதிக்கு வந்துள்ளன.

    மதுரை மாவட்டம், தென்பழஞ்சி, செட்டிகுளம் கிராமங்களைச் சேர்ந்த செல்லப்பாண்டி, பாலமுருகன் ஆகியோருக்கு சொந்தமாக சுமார் 1500 கிடைமாடுகள் உள்ளன.

    தற்போது, தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் இவர்களின் மாடுகள் மேய்ச்சலுக்காக வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ளன. ஜூன், ஜூலை ஆகிய இரு மாதங்களுக்கு பிறகு, வத்திராயிருப்பு பகுதியில் கோடை நெல் சாகுபடி துவங்கப்படும். எனவே, அந்த விளை நிலங்களில் கிடை மாடுகள் முகாமிடப்படும். இந்த மாடுகளின் சாணங்கள் விளை நிலங்களில் உரமாக பயன்படுத்துவதற்கு ஏற்றதாகும். எனவே, விவசாயிகள் ஓர் இரவு மட்டும் கிடை மாடுகள் தங்களது நிலங்களில் தங்குவதற்கு ஏக்கருக்கு ரூ.3500 வரை வழங்குகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai