சுடச்சுட

    

    விருதுநகரில், ஆனைக்குட்டம் அகதிகள் முகாமில் பூட்டியிருந்த வீடுகளில் பணம் திருடியவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    விருதுநகர் ஆனைக்குட்டம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் சகுந்தலா(29). ஈழ எதிலியார் மறுவாழ்வு கழகத்தில் பணி புரியும் இவர், சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள் புறமாக பூட்டியிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த ரூ.8,500 திருடப்பட்டிருப்பது தெரிந்தது. அதேபோல், இந்த முகாமில் வசிக்கும் ஜெயகுமாரி(35) வீட்டுக் கதவை உடைத்து பீரோவிலிருந்த ரூ.6 ஆயிரத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து இருவரும் ஆமத்தூர் போலீஸில் புகார் செய்தனர். விசாரணையில் அதே அகதிகள் முகாமில் வசிக்கும் சுஜித்(31) என்பவர் திருடியது தெரிந்ததால் அவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai