சுடச்சுட

    

    அடிப்படை வசதி இல்லாத மேலராஜகுலராமன் ஊராட்சி

    By ராஜபாளையம்  |   Published on : 13th June 2016 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடிப்படை வசதிகள் பற்றாக்குறையால் மேலராஜகுலராமன் ஊராட்சி மக்கள் தவிப்பில் உள்ளனர்.

    அய்யனாபுரம், சங்கம்பட்டி, சட்டிக்கிணறு உட்பட பல பகுதிகளை கொண்டது மேலராஜகுலராமன் ஊராட்சி. இங்குள்ள அய்யனாபுரம் கிராமத்தில் ஊரணி வடக்குத்தெரு, பிள்ளையார் கோயில் தெரு, சுப்பிரமணியர் கோயில் தெரு போன்ற பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தெருக்களில் வாறுகால்கள் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஊரணி மேட்டுதெருவில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. நல்ல சாலை வசதி இல்லை. பெண்களுக்கு கழிப்பிட வசதி இல்லை என இப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai