சுடச்சுட

  

  அனுமதியின்றி செல்வதைத் தடுக்க தாணிப்பாறையில் சுற்றுச் சுவர்அமைப்பு

  By விருதுநகர்  |   Published on : 13th June 2016 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சதுரகிரி மலைப்பகுதிக்கு அனுமதியின்றி செல்வதைத் தடுக்க வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.

        விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை வழியாக மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல முடியும். அடிவாரத்திலிருந்து சுமார் 5 கி.மீ., தொலையில் மதுரை மாவட்ட எல்லையில் கோயில் அமைந்துள்ளது. சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிப்பதற்காக தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் இங்கு வருவது வழக்கம்.

       இந்நிலையில் கடந்த ஆண்டு தாணிப்பாறை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாள்களில் மட்டும் வனத்துறை மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

     இந்நிலையில், தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து மலைப்பகுதிக்கு சிலர் குறுக்கு வழியில் சென்று வந்தனர். இதைத் தடுக்கும் விதத்தில் மாவட்ட வனத்துறை சார்பில் தாணிப்பாறை அடிவாரத்தில் ரூ. 10 லட்சம் செலவில் 140 மீட்டருக்கு தடுப்புசுவர் மற்றும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

     இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறியது: மலைப்பகுதிக்குள் அனுமதியின்றி உள்ளே செல்வதைத் தடுக்க இந்தச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்றுவரும் பக்தர்கள் முழுமையாக பாதுகாப்பாக இருப்பார்கள் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai