சுடச்சுட

    

    அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

    By சிவகாசி  |   Published on : 13th June 2016 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, ஞாயிற்றுக்கிழமை ஊரக தொழில் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் பலர் இணைந்தனர்.

     சாத்தூர் மதிமுக கிழக்கு ஒன்றியச் செயலரும், நத்தத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான முருகபூபதி, ராஜபாளையம் காங்கிரஸ் நகர் மன்ற உறுப்பினர்கள் ராமராஜ், கண்ணன்ராஜா, சுயேச்சை உறுப்பினர் கண்ணன், தேமுதிக நகர இளைஞர் அணிச் செயலர் முருகன், திமுக வார்டு பிரதிநிதிகள் குமார், திருப்பதி, திருத்தங்கல் பனையடிபட்டி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கிளைச் செயலர் பாலமுருகன் உள்ளிட்ட 150 பேர் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி, அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

     இவர்களுக்கு, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக கரை வேட்டிகளை வழங்கினார். அப்போது, திருத்தங்கல் அதிமுக நகரச் செயலர் பொன்சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai