சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் திமுக நன்றி அறிவிப்புக் கூட்டம்

    By அருப்புக்கோட்டை  |   Published on : 13th June 2016 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அருப்புக்கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், துணைத் தலைவர் தமிழ்காந்தன், நகரச் செயலாளர் ஏ.கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் பேசும்போது, புளியம்பட்டி, திருநகரம், தெற்குத்தெரு பகுதிகளுக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். தாமிரவருணி கூட்டுக்குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படும். கண்மாய்களில் ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திமுக வட்டச் செயலர் டி.திருமேனி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் மல்லையா, நெசவாளர் அணி கடம்பையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai