சுடச்சுட

  

  இளம்பெண்ணுக்கு கொடுமை: கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு

  By விருதுநகர்  |   Published on : 13th June 2016 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகரில் இளம்பெண்ணுக்கு கொடுமை செய்ததாக கணவர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் சுப்பையா தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி சுந்தரமீனாட்சி(23).

   இவர்களுக்கு 2015-இல் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற 2 மாதத்திலிருந்து சுந்தர மீனாட்சியை, கணவர் கணேஷ், மாமனார் கருப்பையா, மாமியார் சுப்புலட்சுமி, அவரது உறவினர்களான கண்ணன், அங்கையற்கண்ணி, புவனேஷ்வரி உட்பட எட்டுப் பேர் கொடுமை படுத்தினராம். இதுகுறித்து சுந்தர மீனாட்சி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கணேஷ் உட்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai