சுடச்சுட

  

  ராஜபாளையம் பகுதியில் கோடை நெல் அறுவடை நடந்துவரும் நிலையில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

     தேவதானம், சேத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் நடந்து வருகிறது. தற்போது கோடை நெல் அறுவடை  துவங்கியுள்ளது.    வழக்கமாக கோடை அறுவடையின் போது கிடைக்க வேண்டிய மகசூலில் பாதிகூட இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.

     கிணற்று பாசன விவசாயிகள் பம்புசெட்டுகளை இயக்கி தண்ணீர் பாய்ச்சி மகசூலை பெற்றுவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை விவசாயத்திற்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் ஒருநாளைக்கு ஓரிருமணி நேரம் மட்டுமே வழங்கப்பட்டது.

  இதனால் கிடைத்த மின்சாரத்தை வைத்து வயலில் ஒருபகுதிக்கு மட்டுமே நீர்பாய்ச்ச முடிந்தது. இவ்வளவு சிரமப்பட்டு மகசூல் கிடைத்தாலும் அவற்றிற்கும் உரிய விலை கிடைக்கவில்லை.

     இது விவசாயிகளை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. உழவு, நடவு செலவுகளையாவது ஈடுகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் அறுவடை பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். தற்போது 72 கிலோ நெல் மூடை 950 முதல் 1100வரை விலை போகிறது. போதுமான விலை கிடைக்காதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai