சுடச்சுட

  

  கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

  By ராஜபாளையம்  |   Published on : 13th June 2016 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மழைக்காலம் தொடங்கும் முன் கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்தை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜபாளையம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரால் தான் ராஜபாளையம் பகுதி முழுவதும் விவசாயமும், குடிநீர் தேவைகளும் நிறைவேறி வருகின்றன. மழைநீர் பல்வேறு ஓடைகள் வழியாக ஆங்காங்கு உள்ள கண்மாய்கள், குளங்கள், அணைகளில் நிரம்புகிறது.

   பின்னர் அவை விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் நீண்ட ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கின்றன. பெரும்பாலான கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி கழிவுநீர் வாறுகால் அளவிற்கு குறுகிக் கிடக்கிறது. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் ஒருஇடத்தில் சேகரமாகும் நீர் மறு இடத்திற்கு செல்ல வழியின்றி ரோட்டிலும், வயல்வழியாகவும் வழிந்தோடி வீணாகிறது.

    தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் கண்மாய், கால்வாய்கள் அனைத்தும் புதர்மண்டியும், கண்மாய்களில் மண் மேவியும், கரைகள் பலமிழந்தும் உள்ளன. இவற்றை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் இப்போதே நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே வெள்ளபாதிப்புகளை ஓரளவிற்காவது தவிர்க்கலாம்.

     இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் என்.ஏ.ராமசந்திரராஜா தெரிவித்ததாவது: ஆக்கிரமிப்புகளை அகற்றி  தூர்வாரினால் மட்டுமே விவசாயத்தைக் காப்பாற்ற முடியும்.  வெள்ள நிவாரணத்துக்கு செலவழிப்பதை விட கண்மாய், கால்வாய்கள் பராமரிப்புக்குச் செலவழிக்கலாம்.

     இதன் மூலம் சேதத்தையும் தடுக்கலாம், மக்களையும் காக்கலாம், கண்மாய், கால்வாய்களும் பாதுகாக்கப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai