Enable Javscript for better performance
\\\"சமுதாய அவலங்களை எழுத்தாளர்கள் வெளிக்கொண்டு வர வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "சமுதாய அவலங்களை எழுத்தாளர்கள் வெளிக்கொண்டு வர வேண்டும்'

    By சிவகாசி  |   Published on : 13th June 2016 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சமுதாய அவலங்களை எழுத்தாளர்கள் வெளிக்கொண்டு வர வேண்டும் என எழுத்தாளர் பொன்னீலன் கூறினார்.

       சிவகாசி த.மாலாபிரியதர்சினி எழுதியுள்ள நீலமயம் புத்தக வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு எழுத்தாளர் பொன்னீலன் மேலும் பேசியதாவது: ஒரு எழுத்தாளர், எழுத்துணர்வில் உள்ளடங்கி விட்டால் அவரால் எழுதாமல் இருக்க முடியாது. தீவிர இலக்கியவாதியாக உள்ள ஒருவர் வேறு ஒருவராக மாற இயலாது. வளரும் எழுத்தாளர்கள் சமூகத்தில் எல்லாவற்றையும் பார்க்கா விட்டாலும், தங்களைச் சுற்றி நடப்பதை கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அதை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை உள்வாங்கிக் கொள்ள இயலும். சமுதாய அவலங்களை எழுத்தாளர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும். தன் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக படைப்பாளி கையாளும் முறையே உத்தி எனக் கூறலாம். படைப்பு தனித் தன்மையாக இருந்தால் சமூக அங்கீகாரம் கிடைக்கும். வாசிக்கும் பழக்கம் வேண்டும்.

        அதனால் எழுத்தில் வீரியத்தையும், புதுமையையும், கருத்துக்களையும் கூற இயலும். வாசகர்களை செப்பனிடத் தெரிய வேண்டும். தற்போதய கல்விமுறை மாற்றப்பட வேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை உயர்த்தாது. தற்போது பெண் எழுத்தாளர்கள் குறைந்து கொண்டே போகிறார்கள். பெண் உணர்வோடு, ஆண் உணர்வையும் பெண் எழுத்தாளர்கள் படைக்க வேண்டும் என்றார்.

     த.மாலா பிரியதர்சினி எழுதிய நீலமயம் நூலை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட, கவிஞர் க.வசந்தா பெற்றுக் கொண்டார். முன்னதாக தமிழாயம் பதிப்பகம் வீ.சிவசங்கர் வரவேற்றார்.

               நூலை எழுதிய த.மாலாபிரியதர்சினி ஏற்புரையாற்றினார்.மாப்பிள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai