சுடச்சுட

    

    பட்டாசு மூலப்பொருள்கள் வைத்திருந்தவர் கைது

    By விருதுநகர்  |   Published on : 13th June 2016 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர், வச்சகாரப்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு மூலப்பொருள்கள் மற்றும் திரிகள் வைத்திருந்தவரை  போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    வச்சகாரப்பட்டி, காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை, அய்யனார் கோயில் விடுதிப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சின்னவாடியைச் சேர்ந்த மோகன்ராஜ்(55), சதானந்தபுரத்தைச் சேர்ந்த சிலம்பரசன்(29) இருவரும் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் சிலம்பரசனை போலீஸார் விரட்டிப் பிடித்துச் சோதனையிட்டுள்ளனர். அவர் அனுமதியில்லாமல் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள் மற்றும் திரிகள் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து சிலம்பரசனை போலீஸார் கைது செய்தனர். தப்பி ஓடிய மோகன்ராஜை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai