சுடச்சுட

  

  முதலமைச்சர் விருது பெற தகுதியுடையவர்கள் ஜூன் 20க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மாவட்ட விளையாட்டு அலுவலக அறிக்கை: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில விருது வழங்கப்பட்டு வருகிறது. 15 வயது முதல் 35 வயது வரை உள்ள சமுதாய நலனுக்குப் பாடுபட்ட ஆண், பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவரது தொண்டு சமுதாயத்தில் சிறந்த தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய மாநில அரசில் பணி புரிவோர் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

  தலா 3 பேருக்கு, சுதந்திர தினத்தன்று ரூ. 50 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழுடன் விருது வழங்கப்படும்.

   இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் கிடைக்கும். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 20 க்குள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai