சுடச்சுட

  

  விருதுநகரில் 2 நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் 711 மனுக்கள் அளிப்பு

  By விருதுநகர்  |   Published on : 13th June 2016 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து 711 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 9 வட்டங்களுக்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. அதன்படி ராஜபாளையம் வட்டத்தில் 212 மனுக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் 133 மனுக்கள், சேத்தூர் வட்டத்தில் 72 மனுக்கள், சிவகாசி வட்டத்தில் 35 மனுக்கள், விருதுநகர் வட்டத்தில் 44, அருப்புக்கோட்டை வட்டத்தில் 28 மனுக்கள், காரியாபட்டி வட்டத்தில் 114, திருச்சுழி வட்டத்தில் 28, வெம்பக்கோட்டை வட்டத்தில் 45 மனுக்கள் என மொத்தம் 711 மனுக்களை பொதுமக்கள் வழங்கியுள்ளனர். அதில், நிலப்பதிவு, பட்டா மாறுதல், நில நிர்வாகம், முதியோர் உதவி தொகை தொடர்பான மனுக்கள் அதிகளவு வரப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai