Enable Javscript for better performance
இலவச வீடுகள் கட்டித்தரக்கோரி நரிக்குறவர்கள் ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    இலவச வீடுகள் கட்டித்தரக்கோரி நரிக்குறவர்கள் ஆட்சியரிடம் மனு

    By விருதுநகர்  |   Published on : 14th June 2016 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தத்தில் உள்ள பட்டா இடத்தில் இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு வீடுகள் கட்டி தரக்கோரி நரிக்குறவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள் கிழமை மனு அளித்தனர்.

    அவர்கள் அளித்த மனு: அருப்புக்கோட்டை சுக்கிலநத்தம் நரிக்குறவர் காலனியில் 56 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகிறது. அனைத்து குடும்பத்தினரும் அடையாள அட்டை வைத்துள்ளோம். எங்களது குழந்தைகள் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். எனவே, இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தில் அனைவருக்கும் இலவச வீடு கட்டி தர வேண்டும். மேலும், நாங்கள் பாசி ஊசி மற்றும் கயிறு விற்பனை செய்வதற்கும் சிறு தொழில் தொடங்குவதற்கு வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    பேருந்து இயக்க கோரி மனு: வெம்பக்கோட்டை ஒன்றியம் சங்கரபாண்டியபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வல்லம்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டி, மஞ்சளோடைபட்டி, கன்னகுடும்பன்பட்டி, ஜெகவீரன்பட்டியை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச பேருந்து அடையாள அட்டை உள்ளது. ஆனால், பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் நடந்தும் மிதிவண்டியிலும் செல்கின்றனர். சாத்தூரிலிருந்து காலை நேரம் மட்டுமே பேருந்து வசதி உள்ளது, மாலையில் கிடையாது. எனவே, மாணவர்களி நலன் கருதி சங்கரபாண்டியபுரத்திற்கு கூடுதல் பேருந்து இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    வெம்பக்கோட்டை ஒன்றியம் புலிப்பாறைபட்டி கிராம ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், இங்குள்ள 30 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai