Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும்: அமைச்சர் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும்: அமைச்சர் பேச்சு

    By சிவகாசி  |   Published on : 14th June 2016 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்துப் பதவிகளையும் அதிமுக கைப்பற்றும் என அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில்  நிறைமதி, வடபட்டி, ஈஞ்சார் உள்ளிட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நன்றி தெரிவித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5ஆண்டுகளில் சிவகாசி தொகுதியில் பல திட்டங்களை முதல்வரின் ஆசியோடு செயல்படுத்தியுள்ளேன். அதற்காக என்னை மீண்டும் தேர்வு செய்த வாக்காளர்களுக்கும், அமைச்சர் பதவி வழங்கிய முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி மற்றும் வார்டு உறுப்பினர்கள் என அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும்.

    மக்கள் தங்களது பிரச்னைகள் குறித்து, சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு உள்ள  அலுவலகத்தில் மனுக்களை கொடுக்கலாம் என கூறினார்.

      சாத்தூர் எம்.எல்.ஏ எஸ்.ஜி.சுப்பிரமணியம், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சி.சுப்பிரமணியன், அதிமுக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி, திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், பேரவை செயலாளர் ரமணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai