Enable Javscript for better performance
குப்பை லாரிகளை மூடிச்செல்ல நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குப்பை லாரிகளை மூடிச்செல்ல நகர்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

    By அருப்புக்கோட்டை  |   Published on : 14th June 2016 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குப்பை லாரிகளை மூடிச் செல்ல வேண்டும் என அருப்புக்கோட்டை நகர்மன்றக்கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    அருப்புக்கோட்டை நகர்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். 36 நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மேலாளர், பொறியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள்: அம்பிகை வித்யாலயா பள்ளி முன்பு கழிவுநீர் வாய்க்கால் அமைக்கவேண்டும். எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி பகுதியில் சாலை அமைக்க வேண்டும். கூடுதலாக குப்பைத் தொட்டிகளை அமைதுது, குப்பை லாரிகளின் மேல்புறம் மூடி கொண்டு செல்ல வேண்டும். நீண்டகாலமாக முடிக்கப்படாமல் உள்ள பணிகளின் ஒப்பந்தகளை ரத்து செய்து புதிய ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும். நகராட்சிப் பூங்காக்களில் மழைநீர்சேகரிப்பு அமைக்க வேண்டும். சொக்கலிங்கபுரம் பகுதியில் சமுதாயக் கூடத்தைத் திறந்து வைத்தல், தெருவிளக்கு அமைத்தல், ஜவஹர் சங்கத் தெரு ஓடையைத் தூர் வாறுதல், 20-ஆவது வார்டில் மினி பவர் பம்ப் அமைத்துத்தருதல்,  தாமிரவருணி குடிநீரை நகருக்கு விரைந்து வழங்கக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவாதம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai