சுடச்சுட

  

  சிவகாசியில் வைகாசி பிரம்மோத்ஸவ திருவிழா தேரோட்டம்

  By சிவகாசி  |   Published on : 14th June 2016 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசி அருள்மிகு விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன்கோயில் வைகாசி பிரம்மோத்ஸவ திருவிழாவினையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

  இக்கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ திருவிழா ஜூன் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி காலை சுவாமி வீதி உலாவும், இரவு சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். 6-ஆவது திருவிழானையோட்டி கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. 7-ஆவது திருவிழாவான ஜூன் 11 ஆம் தேதி, ரிஷபவாகனத்தில் சுவாமி பிரியாவிடையுடன் தபசுக் காட்சியளித்தார். அன்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடந்து திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

  முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. வேதங்கள் முழங்க, செண்டை மேளங்கள் ஒலிக்க பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ரா.முருகன், சுப்பிரமணியபட்டர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai