சுடச்சுட

  

  திரையரங்கில் திரைப்படம் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க புதிய கருவி: கலசலிங்கம் மாணவர்கள் வடிவமைப்பு

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 14th June 2016 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திரையரங்குகளில் திரைப்படங்கள் செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க புதிய மின்னணு கருவியை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

     கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். மெக்கானிக்கல் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்கள் கே.சம்பத், எஸ்.சரத்குமார். இவர்கள் துறைத் தலைவர் வினோலின், பேராசிரியர்கள் ஜெனிபல் சாம்சன், கவிதா, சிவசுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி திரைப்பட திருட்டு குறுந்தகடு பதிவை தடுப்பதற்கான கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த உபகரணத்தை பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன், இயக்குநர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் ச.சரவணசங்கர் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை செயல் விளக்கம் செய்து காட்டி விளக்கினார்.

    இந்த உபகரணத்தில் உள்ள சென்சாரை திரைப்படம் ஒளிபரப்பும் திரைக்குப் பின்னால் பொருத்திவிட வேண்டும். திரையில் திரைப்படம் ஒளிபரப்பாகும் போது, யாரேனும் செல்லிடப்பேசியிலோ, கேமராவிலோ பதிவு செய்ய முயன்றால், அவற்றில் இருந்து வெளியாகும் வெளிச்சத்தை வைத்து திரைக்குப் பின்னால் இருக்கும் இந்த உபகரணம் படத்தின் முழு உருவங்களையும் மங்கலாக்கி, கேமராவில் வெண்மையாகப் பதிவு செய்யும் என்று மாணவர்கள் விளக்கினர்.

      இந்த இயந்திரத்துக்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் மாணவர்கள் கூறினர். இம் மாணவர்களை இயக்குநர் எஸ்.அர்ஜூன் கலசலிங்கம், பதிவாளர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai