சுடச்சுட

    

    தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு விண்ணப்பிக்க 2 நாள் அவகாசம்

    By விருதுநகர்  |   Published on : 14th June 2016 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் ஜூன் 15, 16 ஆகிய நாள்களில் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

      அவர் மேலும் கூறியது: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு ஜூன் 30 இல் தொடங்கி ஜூலை 16 வரை நடைபெறுகிறது. தனித் தேர்வர்களாக முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுத விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு புகைப்படத்துடன் சென்று ஜூன் 15, 16 ஆகிய இரண்டு நாள்களில் பதிவு செய்து தேர்வு கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பங்களை ஜூன் 16 க்குள் அனுப்ப வேண்டும், தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பி க்கும் தேர்வர்களுக்கு தேர்வு கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai