சுடச்சுட

    

    வெளிநாட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு

    By விருதுநகர்  |   Published on : 14th June 2016 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சவூதி அரேபியாவில் மார்ச் மாதம் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது தந்தை பாண்டியராஜன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் மனு அளித்தனர்.

       விருதுநகர் அருகே அஞ்சம்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் மற்றும் அவரது உறவினர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் நாகராஜ்(29), சவூதி அரேபியா ரியாத் நகரில் தனியார் சிமெண்ட் ஆலையில் பணி புரிந்து வந்தார்.

      மார்ச் 21-இல், நிறுவனத்தில் பணி புரிந்த போது நாகராஜ் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சித்தோம்.

     ஆனால், எனது மகன் பணி புரிந்த ஆலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

          இதுகுறித்து ஏற்கெனவே ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். எனவே சடலத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai