சுடச்சுட

  

  சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

  By சாத்தூர்  |   Published on : 15th June 2016 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலிருந்து-இருக்கன்குடி செல்லும் சாலையில், சாத்தூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட்டை கடந்து தான் இருக்கன்குடி,நென்மேனி, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.  சாத்தூர் வழியாக தினமும் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கின்றன. இதனால் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த ரயில்வே கேட் மூடி, திறக்கப்படுகிறது. இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் புகழ்பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கும் செல்ல வேண்டும். இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் சாத்தூர் ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக  சுமார் 20 முதல் 30 நிமிஷங்கள் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதேபோல், அவசரச் சிகிச்சைக்காக ஆம்புலென்ஸ் செல்லும் போதும் காத்திருக்க வேண்டியுள்ளது. வாகனங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகளும் காத்திருந்து கேட்டை கடப்பதால் நேரம் விரயமாகிது.  எனவே, ரயில்வே நிர்வாகம், இந்த பகுதியை கடந்து செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்: இங்கு மேம்பாலம் அமைப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai