சுடச்சுட

    

    சாலைப் பணியாளர்கள் பதவி உயர்வுக்கான புதிய உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை

    By விருதுநகர்  |   Published on : 15th June 2016 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக நெடுஞ்சாலைதுறையில் சாலைப் பணியாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் பதவி உயர்வுக்கான புதிய அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் சங்க பொது செயலாளர் மு. மாரிமுத்து செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

      இதுகுறித்து அவர் கூறியது: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும், பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளர் குரூப் 2 பணியிடம் நேரடியாக 75 சதவீதமும், சாலை பணியாளர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 25 சதவீதமும் நிரப்பப்பட்டு வந்தது.

      நேரடி நியமனம் பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ டிராக்ட்மேன் அல்லது சர்வேயர் படிப்பு முடித்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சாலை பணியாளராக 5 ஆண்டுகள் பணி புரிந்தாலே பதவி உயர்வில் சாலை ஆய்வாளராக நியமிக்கப்படுவர்.

      அதன்படி, தமிழகம் முழுவதும் 350 சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்களாக பணி நியமனம் பெற்று பணி புரிந்து வருகிறார்கள். மேலும், காலி பணியிடங்களுக்கு ஏற்ப ஆண்டு தோறும் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு இருந்து வந்தது. தற்போது தமிழக அரசு, அரசாணை 87இல் நெடுஞ்சாலைத் துறையில் 6.6.2016ன் படி பதவி உயர்வு பெறும் சாலை பணியாளர்கள், ஐடிஐ டிராக்ட்மேன் அல்லது சர்வேயர் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே சாலை ஆய்வாளர் நிலை-2 பதவி உயர்வு வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.

     இந்த அரசாணையால், பதவி உயர்வுக்காக காத்திருக்கும் சாலை பணியாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகும் நிலை உள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai