சுடச்சுட

    

    சிவகாசியில் பந்தல் பொருள்கள் கடையில் தீ விபத்து

    By சிவகாசி  |   Published on : 15th June 2016 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசியில் உள்ள பந்தல் பொருள்கள் கடையில் திங்கள்கிழமை இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

      சிவகாசி காவல்நிலையம் சாலையில் பேச்சிமுத்து (50) என்பவருக்குச் சொந்தமான, பந்தல் பொருள்கள், மற்றும் அலங்கார பொருள்கள் கடை உள்ளது. இந்த கடையில் திங்கள்கிழமை இரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. மேலும், அலங்கார பலூன்களுக்கு எரிவாயு நிரப்புவதற்காக வைத்திருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதனால் அங்கிருந்த அனைத்துப் பொருள்களுக்கும் தீ பரவியது.

      தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான வீரர்கள் சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.  இதில், கடையில் இருந்த அலங்காரப் பொருள்கள், மர சாமான்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

      இந்த தீ விபத்து குறித்து சிவகாசி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai