Enable Javscript for better performance
தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்து கிடக்கும் பாலிதீன் பைகளை அகற்ற கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்து கிடக்கும் பாலிதீன் பைகளை அகற்ற கோரிக்கை

    By விருதுநகர்  |   Published on : 15th June 2016 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்து கிடக்கும் பாலிதீன் பைகளை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      விருதுநகர் மாவட்டத்தில் தாணிப்பாறை, பிளவக்கல், செண்பகத்தோப்பு, அய்யனார் கோயில், சாஸ்தா கோயில் பகுதியில் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் புலி, கரடி, யானை, காட்டெருமை, மான், காட்டுப்பன்றி, குரங்கு முதலான விலங்குகள் உள்ளன.

      தாணிப்பாறை மேற்குத் தொடர்ச்சி மலையில் புகழ் பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்வர். அடிவாரத்தின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருக்கும் மேல் பகுதியிலிருந்து வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றுச்சுவரின் கீழ் பகுதியில் உள்ள இடங்களில் சில கடைகள் மற்றும் தங்கும் விடுதி உள்ளது. தற்போது அமாவாசை, பௌர்ணமி நாள்களில் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத் துறை அனுமதி வழங்கி உள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

      இந்நிலையில் தாணிப்பாறை அடிவார பகுதியில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் பாலிதீன் பைகளை உணவிற்காக எடுத்து செல்லும் குரங்குகள் உணவை உண்ணும் போது பைகளையும் சேர்த்து சாப்பிடுகிறது. வனத் துறையினரோ இது தங்கள் பகுதி இல்லை என கண்டு கொள்வதில்லை. குப்பைகள் குவிந்துள்ளதை அகற்றுவதற்கு மகாராஜபுரம் பேரூராடசி நிர்வாகமோ அக்கறை காட்டுவதில்லை. அதனால், இப்பகுதியில் குவிந்திருக்கும் பாலிதீன் பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     இதுகுறித்து சமூகநல ஆர்வலர் கென்னடி கூறியது: தாணிப்பாறை மலை பகுதியில் குவிந்து கிடக்கும் பாலிதீன் பைகளால் குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வனப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் சுற்றுச்சுழல் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai