சுடச்சுட

    

    பாடப் புத்தகங்கள் அச்சடிப்பதில் தாமதம்: பிளஸ்1 வகுப்புகள் தொடங்குவது எப்போது? மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

    By விருதுநகர்  |   Published on : 15th June 2016 12:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிளஸ்1 பாடப்புத்தகங்களை விரைவில் அச்சடித்து வழங்கி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

      தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று, முடிவுகள் வெளியானது. பிளஸ்1 வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை பெரும்பாலான பள்ளிகளில் முடிவுற்றது.

     இந்நிலையில், பிளஸ்1 மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள் அச்சடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் வகுப்புகள் இன்னும் தொடங்கவில்லை.

      மேலும், பிளஸ்2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கி பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் கணிதம், அறிவியல், கணினி உள்பட பல்வேறு பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால், தொழில் பிரிவில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தையல், செவிலியர், பிட்டர் படிப்புகளுக்குப் பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அதனால், கடந்த 15 நாள்களாக புத்தகம் இல்லாமல் படிக்க மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

      எனவே, இந்த மாத இறுதிக்குள் பிளஸ்1, பிளஸ்2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியது: பிளஸ்1 மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் இன்னும் முழுமையாக அச்சிடப்படவில்லை.

    வகுப்புகள் தொடங்கும் நாளில் இலவச புத்தகம் வழங்கப்பட வேண்டும் என்பதால் கால தாமதம் ஏற்படுகிறது. அதேபோல், பிளஸ் 2 படிக்கும் தொழில் பிரிவு மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் வழங்கக் கோரி கல்வித்துறைக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai