சுடச்சுட

  

  பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

  By அருப்புக்கோட்டை  |   Published on : 15th June 2016 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அருப்புக்கோட்டை அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

      அருப்புக்கோட்டை அருகே செம்பொன் நெருஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் முத்து (21). இவர் அதே பகுதியிலிருந்து பஞ்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பிய இளம்பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அப்பெண் வீட்டிற்கு சென்று மண்ணெண்ணெய்யை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு அந்த பெண்ணை நடந்த சம்பவத்தை கூறியதையடுத்து அவருடைய பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலை ஆய்வாளர் அன்புமதி, வழக்குப் பதிந்து முத்துவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai