சுடச்சுட

    

    விருதுநகர் தாதம்பட்டியில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட முதியவர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

      விருதுநகர் கம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம்(63). இவரை ஜூன் 12 ஆம் தேதியில் இருந்து காணவில்லையாம். இந்நிலையில் தாதம்பட்டி பகுதியில் பரமசிவம் மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.

     பின்னர், அவரை ஆம்புலன்ஸின் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரமசிவம் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

     இதுகுறித்து அவரது மனைவி சூரியகாந்தி அளித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai