சுடச்சுட

  

  முன்னாள் படைவீரர் குழந்தைகள் கல்வி உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்

  By விருதுநகர்  |   Published on : 15th June 2016 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில் கூறியிருப்பதாவது: மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் விருப்புரிமை கல்வி உதவி தொகைத் திட்டத்தில், முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு உதவிதொகை வழங்கப்படுகிறது. இரண்டாம் வகுப்பு முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பங்களை w‌w‌w.‌k‌sb.‌g‌o‌v.‌i‌n​  என்ற இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

   மேலும் கூடுதல் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், 04563-260382 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai