சுடச்சுட

    

    அருப்புக்கோட்டை அருகே லாரி மோதி காவல் சார்பு-ஆய்வாளர் சாவு

    By அருப்புக்கோட்டை  |   Published on : 16th June 2016 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதி, காவல் சார்பு- ஆய்வாளர் உயிரிழந்தார்.            

     விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (55). ஆயுதப்படைப் பிரிவில் காவல் சார்பு- ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி வரை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இரவு 11 மணிக்கு இவர் பந்தல்குடியில் இருந்து தூத்துக்குடி செல்லும் புறவழிச் சாலையில் சாலையோரமாக ஜீப்பை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அப்போது அவ்வழியாக தூத்துக்குடியிலிருந்து மதுரை சென்ற சரக்கு லாரி, துரைராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

     இதுகுறித்து பந்தல்குடி போலீஸார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

      விபத்தில் உயிரிழந்த துரைராஜ் சடலத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) விஜயேந்திர பிதாரி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த துரைராஜுக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai