Enable Javscript for better performance
சாத்தூர் அருகே நின்ற பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதல்: 11 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூர் அருகே நின்ற பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதல்: 11 பேர் காயம்

    By விருதுநகர்  |   Published on : 16th June 2016 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர்- சாத்தூர் நான்கு வழிச் சாலையில் நடுவபட்டி அருகே புதன்கிழமை நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது பின்னால் வந்த மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் 11 பேர் காயமடைந்தனர்.

    விருதுநகரிலிருந்து சாத்தூருக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நடுவபட்டி விலக்கு அருகே நான்கு வழிச் சாலையில் பிரதான சாலையில் பயணிகளை இறக்கி விடுவதற்காக ஓட்டுநர் ஜெயராஜ் பேருந்தை நிறுத்தியுள்ளார். அப்போது திருப்பூரிலிருந்து திருநெல்வேலி சென்ற அரசுப் பேருந்து, நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதியது.

    இதில் நின்று கொண்டிருந்த சாத்தூர் பேருந்து அருகிலிருந்த பாலத்தை தாண்டி பள்ளத்துக்குள் கவிழ்ந்தது.  இதில் பேருந்தில் பயணம் செய்த பாண்டி (49), செல்வக்குமார் (17), மணிகண்டன் (29), சுமதி (32), பாலசுப்பிரமணியன் (61), சுப்பையா (70) மற்றும் இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள் ஜெயராஜ், ரவிச்சந்திரன் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அனைவரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் இப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, சாத்தூர் கோட்டாட்சியர் ஜெயலட்சுமி, வட்டாட்சியர் புஷ்பராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai