Enable Javscript for better performance
சிவகாசி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு விரைவில் செயல்படும்: தலைமை மருத்துவர்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு விரைவில் செயல்படும்: தலைமை மருத்துவர்

    By சிவகாசி  |   Published on : 16th June 2016 12:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள திறன்மிகு தீக்காய சிகிச்சை பிரிவில், அமைக்கப்பட்டு வரும் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு விரைவில் செயல்படத் தொடங்கும் என மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.பிரகலாதன் கூறினார்.

    இது குறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது: சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகளில்  விபத்து ஏற்படும் போது, தீக்காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வந்தனர். இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.4.50 கோடி மதிப்பில் திறன்மிகு தீக்காய சிகிச்சை பிரிவுக்கு தனிக் கட்டடம் கட்டப்பட்டு, சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த கட்டடத்தின் மாடியில் அதிநவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை அரங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அறுவை சிகிச்சை அரங்கில் எல்.இ.டி. மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

    குளிரூட்டும் வசதி செய்யப்பட்டுள்ள இந்த அரங்கில், காற்றை சுத்தப்படுத்தி, காற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றும் லேமினார் ஏர்புளோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செயற்கை சுவாச கருவியுடன் கூடிய ஒர்கஸ் டேம் அமைக்கப்பட்டுள்ளது. சி.ஆம். எனப்படும் எலும்பு அறுவை சிகிச்சைக்கு அதிநவீன கருவி பொருத்தப்படுள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி தங்கும் அறை, பணியாளர்கள் ஓய்வு அறை, பணி மருத்துவர் அறை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்த நவீன வசதி கொண்ட அறுவை சிகிச்சை அரங்கு விருதுநகர் மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லை. இதற்கு 3 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை அரங்குக்கு மேலும் ஒருசில கருவிகள் வர வேண்டியுள்ளது. அவை வந்த உடன் இந்த அறுவை சிகிச்சை அரங்கு செயல்படத் தொடங்கும் என்றார்.

    அப்போது அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் டி.அய்யனார் உடனிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai