சுடச்சுட

  

  தேர்ச்சி விகிதப் பட்டியல் வெளியீடு: சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு 5ஆவது இடம்

  By சிவகாசி  |   Published on : 16th June 2016 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாணவர்கள் தேர்ச்சி விகிதத்திலான அடிப்படையில், வெளியிடப்பட்டுள்ள தர வரிசைப் பட்டியலில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாநில அளவில் 5 ஆவது இடத்தை பெற்றுள்ளது என அக்கல்லூரி முதல்வர் பி.ஜி.விஷ்ணுராம் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 522 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் வெளிட்டுள்ளது.

  அதில் ஏப்ரல்-மே 2015இல் மாணவர்களுக்கான தேர்ச்சி விகித அடிப்படையில் எங்கள் கல்லூரி 93.07 விழுக்காடு தேர்ச்சி பெற்று மாநில அளவில் ஐந்தாமிடம் பெற்றுள்ளது.

   இதற்காக உழைத்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை தாளாளர் ஆர்.சோலைச்சாமி மற்றும் இயக்குநர் எஸ்.விக்னேஷ்வரி ஆகியோர் பாராட்டினர் என அதில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai