சுடச்சுட

    

    சிவகாசி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையில்லை உள்ளிட்டவற்றை விற்றதாக 7 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    சிவகாசி பகுதியில் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்பராக் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை, சிவகாசி- திருத்தங்கல் சாலை, முத்துராமலிங்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, லட்சப்பழம் (45), ராமசாமி (54), சரவணக்குமார் (31), மனோகரன் (53), குலமாடன்(52), தங்கராஜ் (57), குருசாமி (67) ஆகியோர் அவர்களது பெட்டிக் கடைகளில் பான்பராக் மற்றும் புகையிலை பொருள்களை விற்பது தெரிய வந்தது. இதையடுத்து, சிவகாசி நகர் போலீஸார் மற்றும் கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து, புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai