Enable Javscript for better performance
ரூ.2.54 கோடியில் பிளவக்கல் பெரியார், கோவிலாறு அணைகள் சீரமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.2.54 கோடியில் பிளவக்கல் பெரியார், கோவிலாறு அணைகள் சீரமைப்பு

    By விருதுநகர்  |   Published on : 16th June 2016 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், பிளவக்கல் பெரியார் மற்றும் கோவிலாறு அணைகளை ரூ.2.54 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

     பிளவக்கல் பெரியார் அணை நீர்த் தேக்கத்தின் மூலம் 40 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் 8531.17 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வடகிழக்கு பருவ மழை காலங்களில் இந்த அணைகளில் முழுமையாக தண்ணீர் நிரம்புவதில்லை. ஆனால், தென்மேற்கு பருவ மழை காலங்களில் பிளவக்கல் அணையில் 47.56 அடிக்கு தண்ணீர் நிரம்ப வாய்ப்பு உண்டு. அதே போல் கோவிலாறு அணையில் 42.64 அடி கொள்ளளவில் 30 அடி வரை தண்ணீர் நிரம்பும் வாய்ப்புள்ளது.

     இந்நிலையில், பெரியாறு அணையை சீரமைக்க அரசு ரூ.1.9 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதில், பழுதடைந்த 3 கதவணைகளை மாற்றி, புதிய கதவணைகள் அமைக்கவும், ஒரு கதவணையை பழுது நீக்கம் செய்யவும், கரைகளை பலப்படுத்தவும், கைப்பிடி சுவர்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. அதே போல், கோவிலாறு அணையில் ரூ.1.45 கோடி மதிப்பில், 2 புதிய கதவணைகள் பொருத்தும் பணியும், அணைகளை பலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், அணைகளுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்கும் பணியும் இந்த நிதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai