சுடச்சுட

  

  விருதுநகர் நகராட்சியில் புதிய ஆணையராக பழனிவேல் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

  ராஜபாளையம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த தனலட்சுமி, விருதுநகர் நகராட்சியையும் கூடுதல் பொறுப்பாக கடந்த 2 மாதங்களாக கவனித்து வந்தார். பின்பு, அவர் பதவி உயர்வு பெற்று வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக நகராட்சி பொறியாளராக பணிபுரிந்து வந்த மோகன், கூடுதல் பொறுப்பாக ஆணையர் பணிகளையும் கவனித்து வந்தார்.

  இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையராக உள்ள பழனிவேலுவை, விருதுநகர் நகராட்சி ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்க சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டது. இதையடுத்து பழனிவேலு, புதன்கிழமை விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai