சுடச்சுட

    

    விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்: 24 பேர் கைது

    By விருதுநகர்  |   Published on : 16th June 2016 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதில் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

     இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் ரஞ்சித் தலைமை வகித்தார்.

    அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 24 பேரை கைது செய்தனர். அப்போது, போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டோருக்குமிடையே லேசான தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai