சுடச்சுட

  

  குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

  By விருதுநகர்  |   Published on : 17th June 2016 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகரில் ஜூலை மாதம் தொடங்க உள்ள டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். 

    இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.முத்துராஜ் கூறியது:  கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பயிற்சி பெற்றதில் 2030 பேர் தேர்வாகி அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் ஜூலை 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜூன் 22 முதல் ஜூன் 30 -க்குள்  விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai