சிவகாசி அருகே அனுமதியின்றி லாரியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு பண்டல்கள் பறிமுதல்
By சிவகாசி | Published on : 17th June 2016 01:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிவகாசி அருகே புதன்கிழமை உரிய அனுமதியின்றி லாரியில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசு பண்டல்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
காவல் சார்பு -ஆய்வாளர் அழகர்சாமி மற்றும் போலீஸார் மாரனேரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பர்மா காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். லாரியில் 11 பண்டல் பட்டாசுகள் இருந்தன.
விசாரணையில், லாரியில் பட்டாசு கொண்டு செல்வதற்கு உரிய அனுமதி பெறவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் லாரியில் இருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான பிள்ளையார் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் மௌனகுருவை(27) கைது செய்தனர்.