பாலியல் புகாரில் இளைஞர் கைது
By விருதுநகர் | Published on : 17th June 2016 01:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
விருதுநகரில் இளம் பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் கொடுமைப்படுத்தியதாக திருமணமான இளைஞரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
விருதுநகர் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகைச் செல்வம் (24). திருமணமான இவர், தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.
பாத்திமா நகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, பாலியல் கொடுமை செய்து வந்தாராம். பின்னர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்தாராம்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீஸார் கார்த்திகைச் செல்வத்தை கைது செய்தனர்.