Enable Javscript for better performance
பிளஸ் 2 மறுமதிப்பீடு: ஜூன் 20 இல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 மறுமதிப்பீடு: ஜூன் 20 இல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்

    By விருதுநகர்  |   Published on : 17th June 2016 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்கள் ஜூன் 20 இல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்று கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

     அவர் மேலும் கூறியது: விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் சிலர் மறுகூட்டல், மறு மதிப்பீடு மற்றும் நகல் கோரி விண்ணப்பித்துள்ளனர். மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் மட்டுமே sc​a‌n.‌t‌n‌d‌g‌e.‌i‌n என்ற இணைய தளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன்17) வெளியிடப்படும். இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எந்த வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் ஜூன் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு தாங்கள் படித்த பள்ளித் தேர்வு மைய தலைமை ஆசிரியரிடம் நேரில் சென்று அசல் மதிப்பெண்கள் சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai