சுடச்சுட

    

    விருதுநகர் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் புதன்கிழமை இரவு கூலித் தொழிலாளி  உயிரிழந்தார்.

     விருதுநகர் கோவிந்த நல்லூரைச் சேர்ந்தவர் கூடலிங்கம் (40). கூலித் தொழிலாளியான இவர், தனது  மனைவி மாரித்தாயுடன், தாதம்பட்டியில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.

      தாதம்பட்டி - ஒண்டிப்புலி நாயக்கனூர் சாலையில்  வந்தபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் கூடலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.   காயமடைந்த மாரித்தாய்,  சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இத்ந விபத்து குறித்து சூலக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai