சுடச்சுட

    

    விருதுநகர், சிவகாசி, இருக்கன்குடியில் ஜூன் 18 மின் தடை

    By விருதுநகர்  |   Published on : 17th June 2016 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், விருதுநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (மே 18) மின் தடை ஏற்படும் என மின் பகிர்மான செயற் பொறியாளர் தி.திருப்பதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: விருதுநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனால், விருதுநகர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான விருதுநகர் நகர் பகுதி மற்றும் புற நகர் பகுதிகளான குல்லூர் சந்தை, வடமலைக்குறிச்சி, பெரிய வள்ளிக் குளம், மல்லாங்கிணறு, பேராலி, பாவாலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி ஆகிய ஊர்களில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    சிவகாசியில்...சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 18) மின் தடை ஏற்படும் என மின் வாரிய சிவகாசி செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.

      இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்: பாரைப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன்கோயில் பகுதி, ஜக்கம்மாள்கோயில் பகுதி, பேருந்து நிலையப்பகுதி, நாரணாபுரம் சாலை, திருத்தங்கல், கீழத்திருத்தங்கல், செங்கமல நாச்சியார்புரம், சராதா நகர், நடுவப்பட்டி, தேவர்குளம், அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, செவல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி, குகன்பாறை, துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, கோட்டைப்பட்டி, கே.மடத்துப்பட்டி, தாயில்பட்டி, சங்கரபாண்டியாபுரம், காரனேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு சாலை, பராசக்திகாலனி, வடக்குரத வீதி, வேலாயுதம் சாலை, சாட்சியாபுரம், தொழிற்பேட்டை, போலீஸ்காலனி, ஆனையூர், இ.பி.காலனி, விளாம்பட்டி, விஸ்வநத்தம், அய்யப்பன் காலனி, அய்யனார் காலனி, சசிநகர்,சித்துராஜபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள்.

     இருக்கன்குடியில்..காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: நென்மேனி, இருக்கன்குடி, கோசுக்குண்டு, என்.மேட்டுப் பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai