Enable Javscript for better performance
விருதுநகர் நகராட்சி அலுவலக புதிய கட்டட பணியைத் தொடங்குவது எப்போது?- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் நகராட்சி அலுவலக புதிய கட்டட பணியைத் தொடங்குவது எப்போது?

    By விருதுநகர்  |   Published on : 17th June 2016 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    6 மாதங்களுக்கு முன் பூமி பூஜை போடப்பட்ட விருதுநகர் நகராட்சி புதிய கட்டடம் கட்டும் பணியை இதுவரை தொடங்கவில்லை. இப்பணியை விரைந்து தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     விருதுநகர் நகராட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு நிதியாக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது.

     அதில், நினைவுத்தூண் அமைக்க ரூ.70 லட்சம், பூங்கா மேம்பாட்டிற்கு ரூ.1 கோடி, பழைய பேருந்து நிலையத்தில் கட்டடங்கள் மற்றும் காத்திருப்போர் அறை கட்ட ரூ. 1கோடி, நகராட்சியில் கட்டடங்கள் கட்ட ரூ.2 கோடி என உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டது.

     இப்பணிகளுக்கான ஏலம் கடந்த 2015 மார்ச் 11 இல் நடைபெற்றது. இதில் சாலைப் பணிகள், சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணி ஆகியவை மட்டுமே நிறைவடையும் நிலையில் உள்ளன.  இந்நிலையில், நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்காக 6 மாதத்திற்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது.

     இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தின் பின் பகுதியில் அமைந்திருந்த, சுகாதார ஆய்வாளர் அலுவலகங்கள், கணிப்பொறி அறை, நகரமைப்பு அலுவலகம், நகராட்சி தலைவர் அறை மற்றும் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை முதலானவை நகராட்சி அலுவலகத்தின் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டன.  அதன் பின்னர் முந்தைய அலுவலகம் இருந்த கட்டடம் இடிக்கப்பட்டன.

     ஆனால், அப்பணியும் முழுமையாக நடைபெறாததால்  பழைய கட்டடங்கள் பாழடைந்த பங்களா போல் உள்ளன.   இப்பகுதியில் சுற்று சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.  எனவே, நகராட்சி வளாகத்தில் புதிய கட்டடப் பணியை விரைவில் தொடங்க மாவட்ட ஆட்சியார் வே. ராஜாராமன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai