சுடச்சுட

  

  சண்டிகருக்கு வேலைக்குச் சென்றவர் மாயம்

  By ஸ்ரீவில்லிபுத்தூர்,  |   Published on : 19th June 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு வேலைக்குச் சென்றவரைக் காணவில்லை என்ற புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  வத்திராயிருப்பு அருகேயுள்ள கிறிஸ்டியான் பேட்டையைச் சேர்ந்தவர் சு.ராமர் (55). இவரை வ.புதுப்பட்டியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் வேலைக்காக கடந்த பிப்.17 ஆம் தேதி சண்டிகருக்கு அழைத்துச் சென்றுள்ளார். சண்டிகரில் உசிலம்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் நடத்தி வரும் உணவகத்தில் வேலைக்குச் சேர்த்தாராம். பின்னர் ராமர் குடும்பத்தினர் தனலட்சுமியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இரண்டு வாரத்தில் ராமரை அழைத்து வருகிறேன் என்று கூறினாராம். ஆனால், அவர் வரவில்லை.

  பின்பு மீண்டும் அதுகுறித்துக் கேட்ட போது, வரும் வழியில் மதுரை ரயில் நிலையத்தில் தண்ணீர் குடிக்க இறங்கியபோது அவரைக் காணவில்லை என்று தெரிவித்தனராம்.

  இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராமர் குடும்பத்தினர் சார்பில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வத்திராயிருப்பு போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  சிறுவன் மாயம்: ஸ்ரீவில்லிபுத்தூர், கீழப்பட்டி கடைசி தெருவைச் சேர்ந்தவர் செ.மகேஸ்வரி (60). இவரது மகன் ரஞ்சித் (எ) பீட்டர் (15) என்பவர் புதன்கிழமை வீட்டைவிட்டு வெளியே சென்ற பின்னர் வீடு திரும்பவில்லையாம்.

  இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் மகேஸ்வரி சனிக்கிழமை புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai