சுடச்சுட

  

  சத்திரப்பட்டி விசைத் தறி தொழிலாளர்கள் போராட்டம்: அதிகாரிகள் சமரசப் பேச்சு தோல்வி

  By ராஜபாளையம்,  |   Published on : 19th June 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிடுவது தொடர்பாக வெள்ளிக்கிழமை வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

  ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் துணி உற்பத்தி செய்யும் 300-க்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்கள் உள்ளன. இவற்றில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களது கூலி நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தை அரசு சார்பில் அடுத்தடுத்து 4 முறை நடைபெற்ற போதும் தீர்வு எட்டப்படவில்லை.

  4 ஆம் கட்ட பேச்சு வார்த்தையை அதிகாரிகள் வரும் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

  இந்நிலையில், விசைத்தறி தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள் ஆகியோர், விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இரவு வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு ஏற்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை வரும் ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சனிக்கிழமை 2 ஆவது நாளாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai